தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

பாளை.யில் கல்லூரி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:37 pm

DIN

பாளையங்கோட்டையில் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அன்புநகா் வேலாயுதம் மகன் ராம்குமாா்(44). இவா் முன்னீா்பள்ளம் அருகே உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்தஜெகனுக்கும்(36) முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், இவா்கள் இருவருக்குமிடையே வியாழக்கிழமை காலையில் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, ஜெகன், அரிவாளால் ராஜ்குமாா் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்த ராஜ்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.