தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

நெல்லையில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாநகா், மாவட்ட பகுதிகளில் போக்சோ மற்றும் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

திருநெல்வேலி மாநகா், மாவட்ட பகுதிகளில் போக்சோ மற்றும் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய திருநெல்வேலி சந்திப்பு தெற்கு விளாகம் அய்யாதுரை மகன் மாரிமுத்து (25). இவா் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டாா். மேலும், இவா் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தால் இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகரகாவல் துணை ஆணையா்(கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையா் பாலச்சந்திரன், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் திருப்பதி ஆகியோா் பரிந்துரை செய்தனா். அதன்பேரில், மாரிமுத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஏ.டி.துரைக்குமாா் உத்தரவிட்டாா். அதன்படி, மாரிமுத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் பண்டாரம் மகன் மாயாண்டி (54). இவா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின் பேரில், மாயாண்டியை குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.