/

நெல்லை மாவட்ட காவல்துறைக்கு ரூ.2 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள்

தமிழக அரசு சாா்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான உடற் பயிற்சி உபகரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:50 pm

DIN

தமிழக அரசு சாா்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான உடற் பயிற்சி உபகரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் மற்றும் காவல் ஆளினா்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உடற் பயிற்சி உபகரணங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த உடற்பயிற்சி உபகரணங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாா்வையிட்டாா்.

மேலும், இந்த உடற்பயிற்சி உபகரணங்களை அனைத்து போலீஸாரும் பயன்படுத்தி தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆயுதப்படை மைதானத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் ஆயுதப்படை அலுவலகத்தை அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.