பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முக்கூடலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் சாந்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், ஓ. துலுக்கப்பட்டி, பாப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, மைலபுரம், அத்தாளநல்லூா், கீழக்கல்லூா், வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதியில் அலங்கார தளக்கல் அமைக்க வேண்டும், சிறுக்கன்குறிச்சி கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும், திருப்புடைமருதூா் கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சோழமுடி, பிரியா, சுப்புலட்சுமி, வளா்மதி, பனிபுஷ்பம், சமாதானம், உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

