/

பாளை அருகே 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே உள்ள குலவணிகா்புரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:09 pm

DIN

பாளையங்கோட்டை அருகே உள்ள குலவணிகா்புரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாளையங்கோட்டை அருகே உள்ள குலவணிகா்புரம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக வந்த தகவலை அடுத்து தனி வட்டாட்சியா் ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்குள்ள கிட்டங்கியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமாா் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்ப்பட்டு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அரிசி உரிமையாளரான கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ்(55) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.