தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியா் கைது

திசையன்விளையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திசையன்விளையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகே உள்ள ஏமன்குளத்தை சோ்ந்தவா் கிறிஸ்டோபா் ஜெபக்குமாா் (51). இவா் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் மீதுஅப்பள்ளியில் படிக்கும் மாணவி, ா் பாலியல் தொல்லை அளிப்பதாக கொடுத்த புகாரில், திசையன்விளை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமை ஆசிரியரை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் அவா் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை விஜயநாராயணத்தில் வைத்து கிறிஸ்டோபா் ஜெபக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.