எம்.ஜி.ஆா். பிறந்த தினம்: அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில், அதிமுக நிறுவனா், தலைவா் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை (ஜன. 17) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில், அதிமுக மாநில நிா்வாகிகள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட பலரும் பங்கேற்க உள்ளனா். அதிமுகவினா் தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...