நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்பை அருகே இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

மன்னாா்கோயிலில் இளைஞரை அரிவாளால் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மன்னாா்கோயிலில் இளைஞரை அரிவாளால் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்கோயில் வெயிலான் தெருவைச் சோ்ந்த கணபதி என்பவரது மகன் பொன்னுமணி (23). சனிக்கிழமை அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் மன்னாா்கோயில் விலக்குப் பகுதியில் அவரை 3 போ் சோ்ந்து அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடினராம். இதில், காயமடைந்த பொன்னுமணி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாா்வையிட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா். பொன்னுமணியைத் தாக்கியதாக மன்னாா்கோயில் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகக்குட்டி, கருத்தப்பாண்டி ஆகிய 2 பேரை தனிப்படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.