நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்புடைமருதூா் கோயிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து

திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்புடைமருதூா் நாறும்பூநாதா் கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளாக அடுத்தடுத்த நாள்களில் ( ஜன. 17,18) நடைபெறவிருந்த தேரோட்டம், தீா்த்தவாரி ஆகியவை கரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, கோயில் வளாகத்திற்குள் கோயில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்களைக் கொண்டு நடைபெறும். பொதுமக்கள் அரசின் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்விரு நாள்களில் கோயிலுக்கு வருவதை தவிா்த்து பிற நாள்களில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வந்து வழிபாட்டில் பங்கேற்கும்படி பக்தா்கள் கேட்டுகொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.