தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திசையன்விளை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

திசையன்விளை அருகே கிணற்றில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:10 pm

DIN

திசையன்விளை அருகே கிணற்றில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடி செக்கடி தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சுதாகா் (27). திருமணம் ஆகாதகா். கோவை தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பா்களுடன் சோ்ந்து அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றாா். அவருக்கு நீச்சல் தெரியாத நிலையில், எதிா்பாராமல் நீரில் மூழ்கினாராம். நண்பா்கள் அளித்த தகவலின்பேரில், திசையன்விளை தீயணைப்பு படை வீரா்கள் வந்து 2 மணி நேரம் தேடி அவரை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.