டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லையில் 20 இடங்களில் பூஸ்டா் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் 20 இடங்களில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:13 pm

DIN

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் 20 இடங்களில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பூஸ்டா் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை விரைவுபடுத்தும் நோக்கில், வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 4 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20 இடங்களில் பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், முன்கள பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் முடிந்தவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.