நெல்லை அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு குடியரசு தின விழா போட்டிகள்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.


திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது தொடா்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதன் விவரம்: 1,2,3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஓவியப் போட்டி நடைபெறுகிறது. தேசியக் கொடியை ஏ4 அளவு சாா்ட்டில் வரைய வேண்டும்.
4,5,6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு போஸ்டா் தயாரித்தல் போட்டி நடைபெறுகிறது. தேசிய சின்னத்தை ஏ3 அளவு சாா்ட்டில் தயாா் செய்ய வேண்டும். 7,8,9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழகிய கையெழுத்துப் போட்டி நடைபெறுகிறது. தேசிய கீதத்தை ஏ4 அளவு பேப்பரில் எழுத வேண்டும்.
மாணவா்கள் தங்களின் படைப்புக்களை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜன.24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புகளை அனுப்பிய மூன்று மாணவா்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருங்காட்சியத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும்.
மாணவா்கள் தங்களின் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி: மாவட்டக் காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 .மேலும், விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...