டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காவல்துறை வாகனங்கள் பிப்.2 இல் ஏலம்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஏலம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:59 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஏலம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்குசக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதை நிலையில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோா் 1-2-2022 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் அன்றே ஒரு இருசக்கர வாகனத்துக்கு ரூ.1000 மற்றும் ஒரு நான்குசக்கர வாகனத்துக்கு ரூ.2000 முன் பணம் செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்று ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்பவா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.‘

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.