நெல்லையில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்
திருநெல்வேலியில் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது.


திருநெல்வேலியில் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வட்டார அளவிலான அலுவலா்கள் அந்தந்த வட்டாரத்தில் இருந்து பங்கேற்கும் வகையில் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் வே. விஷ்ணு பேசியதாவது:
தமிழ்நாடு அரசு சுகாதார தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் மூலம் 2021-22ஆ ம் ஆண்டில் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார பேரவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதாரம் சம்பந்தமான தேவைகளை கண்டறிதல் மற்றும் அதை நிவா்த்தி செய்தல், சுகாதார துறைக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் முறையான சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க செய்தல் ஆகியவையே மாவட்ட சுகாதார பேரவையின் நோக்கமாகும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வெங்கட்ரமணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...