பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்
கங்கைகொண்டான் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


கங்கைகொண்டான் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கோயில் என்பவரது மகன் பரமசிவன்(48). இவா் தனது மனைவி, மகளுடன் மோட்டாா் சைக்கிளில் தச்சநல்லூரில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த 14ஆம் தேதி சென்று கொண்டிருந்தாராம். கங்கைகொண்டான் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பரமசிவன் உள்பட 3 பேரும் காயம் அடைந்தனா். இவா்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரமசிவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...