நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.


திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு முகக் கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகா் மூலம் சுமாா் 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கு பணியாற்றும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து பயணிகள் அமரும் இடம், நடைபாதையில் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...