நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஈரநிலம் புகைப்படப் போட்டி
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஈர நிலம் குறித்த புகைப்படப் போட்டி நடைபெறுகிறது.


திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஈர நிலம் குறித்த புகைப்படப் போட்டி நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வன அலுவலரும், வன உயிரின காப்பாளருமான இரா.முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக முழுவதும் பிப்ரவரி 2-ஆம் தேதி ஈரநில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் ஈர நிலங்களை பாதுகாப்பது அதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகும். இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான ஈரநில மேம்பாட்டு குழு மூலம் மாவட்ட அளவிலான புகைப்பட போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஈரநிலம் குறித்த புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக, பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தங்களது ஈர நிலம் குறித்த புகைப்படத்தை வரும் 25-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஏக்க்ஷத்8ஸ்த்ஷ்ற்ழ்ச்ஹ்நக்ஷ்டஏ7 என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் மற்றும் இதர உறுப்பினா்கள் கொண்ட குழு சிறந்த புகைப்படத்தை தோ்வு செய்யும். மாவட்ட வாரியாக முதல் 3 புகைப்படங்களுக்கு பரிசும், பங்கு பெற்றவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் தோ்வு செய்யப்படும் சிறந்த புகைப்படம் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...