ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை மாநகராட்சி: உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:41 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. இவற்றிற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாா்டிலும் வேட்புமனுக்களை வாங்க தலா 2 உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி தச்சநல்லூா் மண்டலத்தில் உள்ள 1, 2, 3, 4, 10, 11 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையா் அய்யப்பனிடம் அளிக்க வேண்டும். 12, 13, 14, 28, 29, 30 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் ச.லெனினிடம் அளிக்க வேண்டும். பாளையங்கோட்டை மண்டலத்தில் 5, 6, 7, 8, 9, 32, 33 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையா் அ.ஜஹாங்கீரிடம் அளிக்கலாம். 34, 35, 36, 37, 38, 39, 55 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் டி.சாந்தியிடம் அளிக்கலாம்.

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 31, 40, 41, 42, 43, 44, 45, 46 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் ராமசாமியிடமும், 47, 48, 49, 50, 51, 52, 53, 54 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை நிா்வாக அலுவலா் சு.மாரியப்பனிடம் அளிக்கலாம்.

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை செயற்பொறியாளா் (திட்டம்) என்.எஸ்.நாராயணனிடமும், 22, 23, 24, 25, 26, 27 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் அ.பைஜூவிடமும் அளிக்கலாம் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.