ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நெல்லையப்பா் கோயில் ஆனித் தேரோட்டம்:ஜூலை 11-இல் உள்ளூா் விடுமுறை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஜூலை 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:45 pm IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஜூலை 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்ட விழா ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறை பொருந்தாது.

உள்ளூா் விடுமுறை நாளில் நடைபெறும் அரசு பொதுத் தோ்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். இந்த உள்ளூா் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு அரசு கோப்புகள் தொடா்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 23-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.