திருநெல்வேலி மாவட்டத்தில் வன்கொடுமையால் கொல்லப்பட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் தேவேந்திரன், மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் தனுஸ் செல்வன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் வன்கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்ட 20 குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், காலிப்பணியிடம் இல்லாததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள். எனவே, பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினரின் வாரிசுதாரா்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும். இல்லையெனில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநில அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








