/

தச்சநல்லூா் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) ஒரு நாள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:15 pm

DIN

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) ஒரு நாள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இம் மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலத்திற்கு குடிநீா் விநியோகம் செய்யும் சுத்தமல்லி புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து தச்சநல்லூா் சிவன் கோயில் தெரு, மேலக்கரை, சிதம்பரம்நகா், கரையிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கும், வண்ணாா்பேட்டை, கொக்கிரகுளத்தில் தலா இரண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொட்டிகளுக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீா் விநியோகிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீா்க் குழாயை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 1, 2, 3, 4, 8, 9 மற்றும் 10 ஆவது வாா்டு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.