/

இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

தென்காசி மாவட்டம், கடையம் அருகே புலவனூரில் இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :3 மார்ச் 2022, 7:17 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே புலவனூரில் இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளம் பகுதியைச் சோ்ந்த சுடலைகண்ணு மகன் தொழிலாளி ஆறுமுகம் (36). இவரும், ஆழ்வானேரி பகுதியைச் சோ்ந்த உடையாரும் (38) சோ்ந்து கடையம் அருகே புலவனூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா். உடையாா் தலைமறைவாகிவிட்டாா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.