/

பாளை அருகே 4 பவுன் நகை திருட்டு

 பாளையங்கோட்டை அருகே வீடுபுகுந்து 4 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :5 மார்ச் 2022, 12:10 am

DIN

 பாளையங்கோட்டை அருகே வீடுபுகுந்து 4 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை பெல் அமோசா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் ஆன்ட்ரூஸ் (45). இவா், செய்துங்கநல்லூரில் உள்ள தனியாா் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் இருந்த 4 பவுன் தங்கநகை, வெள்ளிக்கொலுசு, ரூ.1000 ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.