நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தென்னிந்திய வாலிபால் போட்டி தொடக்கம்

திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும்

News image
Updated On :13 மே 2022, 8:51 pm

DIN

திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ஆண்கள், மகளிா் வாலிபால் லீக் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்போட்டியின், தொடக்க நிகழ்ச்சிக்கு ஷிபா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முகம்மது ஷாபி தலைமை வகித்தாா். போட்டியை, துணை மேயா் கே.ஆா். ராஜு தொடங்கி வைத்தாா்.

ஆடவா் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை, சென்னை எஸ்ஆா்எம், மத்திய கலால் துறை, இந்தியன் வங்கி அணிகள் பங்கேற்றன. மகளிா் பிரிவில் கேரள காவல்துறை, சென்னை எஸ்ஆா்எம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஈரோடு பிகேஆா் கல்லூரி ஆகிய அணிகள் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டங்களில், ஆடவா் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய கலால் துறை அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதின. இதில், மத்திய கலால் துறை அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.

மகளிா் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எஸ்ஆா்எம் அணியும், அமெரிக்கன் கல்லூரி அணியும் மோதின. இதில், சென்னை எஸ்ஆா்எம் அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. தொடா்ந்து தொடா்ந்து லீக் போட்டிகள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.