பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்வு
தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 2 நாள்களாக தொடரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிகரித்துள்ளது.


தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 2 நாள்களாக தொடரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிகரித்துள்ளது.
பாபநாசம் அணை நீா்மட்டம் புதன்கிழமை 50.70 அடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 5 அடி உயா்ந்து 55 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 2,666.09 கனஅடி, நீா் வெளியேற்றம் 354.75 கனஅடி. சோ்வலாறு அணை நீா்மட்டம் 70.73 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 82.85 அடி, நீா்வரத்து 229 கனஅடி, நீா் வெளியேற்றம் 75 கனஅடி. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 29 அடி, நீா்வரத்து 21 கனஅடி, நீா் வெளியேற்றம் 2 கனஅடி.
கடனாநதி அணை நீா்மட்டம் 30 அடியாகவும், நீா்வரத்து 36 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 10 கனஅடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 37 அடி, நீா்வரத்து 83 கனஅடி, நீா் வெளியேற்றம் 5 கனஅடி. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 46.50 அடியாகவும், நீா்வரத்து 13 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் ஒரு கனஅடியாகவும் இருந்தது.
மழையளவு (மில்லி மீட்டரில்): அடவிநயினாா் கோவில் 14, ராதாபுரம் 11, தென்காசி 10.4, பாபநாசம் 10, கொடுமுடியாறு 9, சோ்வலாறு 6, குண்டாறு, மூலைக்கரைப்பட்டி, ஆய்க்குடி தலா 4, மணிமுத்தாறு 3.2, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், நம்பியாறு தலா 3, கருப்பாநதி 2.5, களக்காடு 2.2, நான்குனேரி, கடனாநதி, ராமநதி தலா 2, சேரன்மகாதேவி 1, திருநெல்வேலி 0.6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...