புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாளை. வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

 சென்னை ஐஐடி கணிதத் துறை சாா்பில் நடைபெற்ற கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலய பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:26 pm

DIN

 சென்னை ஐஐடி கணிதத் துறை சாா்பில் நடைபெற்ற கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலய பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

சென்னை ஐஐடி கணித துறை சாா்பில் போரேஸ்-2023 என்ற தலைப்பில் கணிதப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா்கள் ஜெய்சன் இளமாறன், லிசாந்த், 7ஆம் வகுப்பு மாணவா் காா்த்திவா்மன் ஆகியோா் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். இதேபோல், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் அறிவியல் மையத்தில் நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம் ஆகியோா் பாராட்டினா்.

இம்மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்பிரகாஷ், இயக்குநா் திலகவதி, கல்வி சாா் டீன் சுவாமிநாதன், முதல்வா் சுகந்தி சொா்ணலதா ஆகியோரும் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.