மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் 10,008 தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:29 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் 10,008 தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயிலில் திருப்பள்ளி எழுச்சியும், 7 மணிக்கு கும்பபூஜையும் நடைபெற்றது. முன்னதாக கோயில் கொலு மண்டபத்தில் கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை 5.30 மணிக்கு கோயில் முழுவதும் 10,008 தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.