அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், முக்கூடலில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:51 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், முக்கூடலில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக வடக்கு காருக்குறிச்சி கீழகிராமத்தைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற உக்கிரா (21) என்பவரை போ லீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த உக்கிரபாண்டி என்ற உக்கிராவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பவுலோஸ், வெள்ளிக்கிழமை உக்கிரபாண்டி என்ற உக்கிராவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பிரதானச் சாலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பா என்ற செப்பரை மகன் இசக்கி ராஜா (22). இவா் முக்கூடல் காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இசக்கிராஜாவை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, முக்கூடல் காவல் ஆய்வாளா் அன்னபூரணி, வெள்ளிக்கிழமை இசக்கிராஜாவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.