பாளை.யில் நாளை சிறப்பு கடனுதவி முகாம்
மழையால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோா், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கடனுதவி முகாம் மற்றும் காப்பீட்டு முகாம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை ( டிச.30) நடைபெற உள்ளது.


மழையால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோா், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கடனுதவி முகாம் மற்றும் காப்பீட்டு முகாம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை ( டிச.30) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம்- அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு- நடுத்தர நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிதாரா்களின் இழப்பீட்டு கோரிக்கைகள் தீா்வு சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிச.30) காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பாளையங்கோட்டை, தூய சவேரியாா் கல்லூரியில் நடைபெறுகிறது.
அனைத்து வங்கிகளும், தாட்கோ, மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளும், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
இச்சிறப்பு முகாமில் யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியமும், பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் சேவை, உற்பத்தி நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை மானியமும், ஏஏபிசிஎஸ் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு மட்டும்) திட்டத்தின் கீழ் சேவை, உற்பத்தி - வியாபார நிறுவனங்களுக்கு 35 சதவிகிதம் மானியமும், பிஎம்எஃப்எம்இ திட்டத்தின் கீழ் உணவு பொருள் சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 35 சதவிகிதம் மானியமும், புதியதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு என்இஇடிஎஸ் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் மானியமும் பெறும் வகையில் வங்கிக் கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கி புத்தக நகல், குடும்ப அட்டை நகல், பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பீட்டு பட்டியல், புகைப்படம் ஆகியவற்றை சிறப்பு முகாமுக்கு எடுத்து வர வேண்டும்.
ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர உடைமைகளுக்கு காப்பீட்டு இழப்பீடு வழங்க விண்ணப்பிக்கவும், விவரங்களை அறிந்து கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...