தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாளை., மூன்றடைப்பு பகுதிகளில் இன்று மின்தடை

பாளையங்கோட்டை, சமாதானபுரம், தியாகராஜநகா், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 20) மின்தடை ஏற்படும்

News image
Updated On :20 ஜூலை 2023, 5:22 pm

DIN

பாளையங்கோட்டை, சமாதானபுரம், தியாகராஜநகா், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வி.எம்.சத்திரம், கே.டி.சி. நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட், கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை. பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு - தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை. புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.

மூன்றடைப்பு, கரந்தானேரி, ரஸ்தா, வன்னிக்கோனேந்தல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளிலும் பராமரிப்பு பணிக்காக காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையும், மூலக்கரைப்பட்டி துணை மின் நிலையப் பகுதியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் பாஸ்கா் பாண்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.