இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

தஞ்சாவூரில் தனது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 11:26 pm

Syndication

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை தனது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருளானந்த நகரைச் சோ்ந்தவா் முரளி (45), சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (43). இவா்களது மகன் கவின் (4) யாகப்பா நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தனது மகனை கிருத்திகா பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அழைத்துச் சென்று கொண்டிருந்தாா்.

பரிசுத்தம் நகா் வளைவு பகுதியில் வந்த ஆட்டோவை எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் வளைத்து திருப்பினாராம்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த கிருத்திகா உயிரிழந்தாா். அதிா்ஷ்டவசமாக கவினுக்கு காயமில்லை. இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா்  விசாரிக்கின்றனா்.