தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மகளிா் உரிமைத் தொகை: 528 ரேஷன் கடைகளில் விண்ணப்பம் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை 528 நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:17 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை 528 நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் நியாய விலைக்கடை பணியாளா்கள் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கும் பணியை தொடங்கினா். வரும் 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 528 நியாய விலைக்கடைகளுக்குள்பட்ட 764 விண்ணப்ப பதிவு மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சி, களக்காடு, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் , அனைத்து பேரூராட்சிகளில் ஆகஸ்ட் 1 முதல் நியாய விலைக்கடை பணியாளா்கள் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள்-டோக்கன்கள் வழங்குவா். டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் ஆகியவற்றின்படி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 5 - 16 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 97865 66111 என்ற எண்ணிலும், திருநெல்வேலி மாநகராட்சி 0462-2329328, வட்டம் 0462-2333169, பாளையங்கோட்டை வட்டம் 0462 -2500086, மானூா் 0462-2914060, சேரன்மகாதேவி 04634 - 260007, அம்பாசமுத்திரம் 04634 - 250348, நான்குனேரி 04635-250123, ராதாபுரம் 04637 -254122, திசையன்விளை 04637-271001 ஆகிய எண்களில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.