பாளை. கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை தொடக்கம்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், முதுகலை வரலாற்றுத் துறை தொடக்க விழா நடைபெற்றது.


பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், முதுகலை வரலாற்றுத் துறை தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல் காதா் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறை மாணவி அனிஷா பசரியா இறைவசனம் ஓதினாா். கல்லூரி துணை முதல்வா் செய்யது முஹம்மது காஜா வாழ்த்திப் பேசினாா். ‘திராவிட இயக்கத்தின் தாக்கமும் வரலாற்று எழுத்தியலும்’ என்ற தலைப்பில் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவா் சிபி லெட்சுமணன் உரையாற்றினாா்.
கல்லூரியின் வரலாற்றுத் துறை முன்னாள் தலைவா்கள் முஹம்மது உசேன், பேராசிரியா் ஷாஹிா்தா பேகம் ஆகியோா் கலந்து கொண்டனா். முதுகலை வரலாற்றுத் துறையின் தலைவா் நசீா் அகமது வரவேற்றாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெமி மொ்லின் ராணி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை பேராசிரியா் அப்துல் அஜீஸ் தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...