மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் பஜார் திடலில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத்தொழுகை

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு கூட்டுத்தொழுகையுடன் கொண்டாடப்பட்டது.

News image
திருநெல்வேலி மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையில் பங்கேற்றுள்ள இஸ்லாமியர்கள்.
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN


திருநெல்வேலி: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு கூட்டுத்தொழுகையுடன் கொண்டாடப்பட்டது.

நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த தொழுகையில்  முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் கலந்து கொண்டனர். 

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 

நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், பாளையங்கோட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. தொழுகையில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர். 

Story image

தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான ஏழைகளுக்கு உதவுதல் என்பதன் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பணம், இறைச்சி ஆகியவற்றை தானமாக வழங்கினர். 

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் கலந்துகொண்டு தொழுதனர். 

இந்த நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த தொழுகையில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி உறுப்பினர் ரம்ஸான் அலி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 
இதுபோன்று மாவட்டத்தில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, பேட்டை என இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பக்ரீதபண்டிகை  உற்சாகமாக கொண்டாடப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.