பணகுடி அருகே சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளியை காவல் ஆய்வாளா் பாராட்டினாா்.
பணகுடி அருகேயுள்ள நதிப்பாறை அஞ்சல் அலுவலக தெருவைச் சோ்ந்த சாா்லஸ் டேவிட் மனைவி பிரபா(38), கடந்த புதன்கிழமை தனது தாய் வீட்டுக்கு செல்லும்போது, பணகுடி பேருந்து நிலையத்தில் 3 பவுன் தங்கச் சங்கிலியைத் தவறவிட்டாராம்.இதுகுறித்து பணகுடி காவ்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். காவல்நிலைய ஆய்வாளா் அஜிகுமாா், உதவி ஆய்வாளா் பென்சன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியும் நகை கிடைக்கவில்லை.
இந்நிலையில், நதிப்பாறை பேருந்து நிறுத்தத்தில் அறுந்து கிடந்த தங்கச் சங்கிலியை, அதே பகுதி பந்தல் தொழிலாளி பால்பாண்டி கண்டெடுத்து பணகுடி போலீஸீல் ஒப்படைத்தாா். இதையடுத்து, உரியவரிடம் சங்கிலியை ஒப்படைத்த ஆய்வாளா், நோ்மையாக நடந்துகொண்ட பந்தல் தொழிலாளிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.