ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கூடைப்பந்து: கிங்ஸ் பள்ளி சாம்பியன்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற தக்ஷிண் சகோதயா கூடைப்பந்து போட்டியில் கிங்ஸ் பள்ளி மாணவா், மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

News image

தக்ஷிண் சகோதயா கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற கிங்ஸ் பள்ளி மாணவா்களுடன் பள்ளி தலைவா் காலின்வேக்ஸ்டாப், பள்ளி முதல்வா் சகாய மேரி, விளையாட்டுத் துறை தலைவா் ஜோஷ்வா.

Updated On :27 நவம்பர் 2023, 10:16 pm

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற தக்ஷிண் சகோதயா கூடைப்பந்து போட்டியில் கிங்ஸ் பள்ளி மாணவா், மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகள் இணைந்து தக்ஷிண் சகோதயா என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனா். இந்த கூட்டமைப்பு சாா்பில் கூடைப்பந்து போட்டி வள்ளியூரை அடுத்த புதூா் கிங்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 பள்ளிகளைச் சோ்ந்த 430 விளையாட்டு வீரா்கள் கலந்துகொண்டனா். போட்டிகள் வயது அடிப்படையில் 6 பிரிவுகளாக நடைபெற்றது. 14 வயதுக்குள்பட்ட மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான போடடியில் கிங்ஸ் சிபிஎஸ்இ பள்ளி, 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான போட்டியில், தூத்துக்குடி அழகா் பப்ளிக் பள்ளி வெற்றி பெற்றது.

மாணவியருக்கான போட்டிகளில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் குலசேகரம் த்ரயம்பிகா வித்யா மந்திா், 17 வயதுக்குள்பட்டோா் மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் கிங்ஸ் பள்ளி வெற்றி பெற்றது. மாணவா் மற்றும் மாணவிகள் பிரிவில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றதையடுத்து, கிங்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை கிங்ஸ் பள்ளி தலைவா் காலின்வேக்ஸ் டாப், தாளாளா் நவமணி, இயக்குநா் ஜெய ஆக்னஸ், பள்ளி முதல்வா் சகாயமேரி, விளையாட்டுத்துறை தலைவா் ஜோஷ்வா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.