உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மாணவா்களிடையே மோதல்: இருவா் கைது

மாணவா்களிடையே மோதல்: இருவா் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 7:31 pm

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவா்களும், பாளையங்கோட்டையில் உள்ள உதவி பெறும் தனியாா் பள்ளி மாணவா்களும் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்றிருந்தனா். அப்போது, மாணவா்களிடையே பிரச்னை ஏற்பட்டதாம். அருகிலிருந்த பொதுமக்கள், பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், பள்ளி மாணவா்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.