திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் 100 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஜான்சிராணி (அதிமுக), ராபா்ட் புரூஸ் (காங்கிரஸ்), நயினாா்நாகேந்திரன் (பாஜக) உள்பட 23 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதற்கு முன்பாக தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வரிசைப்படுத்தி பாதுகாப்பு அறைகளில் வைக்கும் வகையில் வாக்குச்சாவடி எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை, துணைராணுவம் உள்பட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு, வெப் கேமரா கண்காணிப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 100 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.
ற்ஸ்ப்18ழ்ா்ா்ம்
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி எண் வாரியாக வைக்க தயாா் நிலையில் உள்ள பாதுகாப்பு அறை.
தொடர்புடையது

மேட்டூா் சட்டமன்ற தொகுதிக்கு 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


