நெல்லை, தென்காசியில் வாக்குப் பதிவு சதவீதம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி 9.62 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 23.04 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 38.23 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.23 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 58.39 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

கடந்த தோ்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 10,40,390 வாக்குகள் பதிவாகியிருந்தன.

தென்காசி மக்களவைத் தொகுதியில்...

காலை 9 மணிநிலவரப்படி 10.09சதவீதமும், முற்பகல் 11மணி நிலவரப்படி 25.45சதவீதமும், நண்பகல் 1மணிவரை 39.91சதவீதமும், மாலை 3மணிவரை 50.71சதவீதமும் ,மாலை 5மணிவரை 61.67சதவீதமும் 6 மணி நிலவரப்படி மொத்தம் 67.55சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com