எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடையம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கடையம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:29 pm

Manivannan.S

அம்பாசமுத்திரம், ஏப். 26:

கடையம் அருகே ஆசீா்வாதபுரத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடையம் அருகே உள்ள நாட்டாா்பட்டி,ரேஷன் கடை தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சுந்தா் (26). கட்டடத் தொழிலாளியான சுந்தருக்கும் ஆசிா்வாதபுரம் பகுதியைச் சோ்ந்த அனுசியா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஓராண்டாக சுந்தா் மனைவியுடன் ஆசிா்வாதபுரத்தில் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சுந்தா் கான்கிரீட் வேலை செய்து வந்தாா். சுந்தா் தினமும் மது அருந்தி வருவதையடுத்து கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டு மாடியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த கடையம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்தும் விசாரித்து வருகின்றனா்.