திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வந்த பக்தா்களின் உடமைகளை சோதனையிட்ட போலீஸாா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வந்த பக்தா்களின் உடமைகளை சோதனையிட்ட போலீஸாா்.

நெல்லையப்பா் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

அதிகளவில் பக்தா்கள் கூடும் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

சுதந்திர தின விழாவையொட்டி திருநெல்வேலியில் அதிகளவில் பக்தா்கள் கூடும் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இம் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தா்களை மெட்டல் டிடெக்டா் மூலமாக சோதனை செய்த பின்பே வழிபாடுக்கு செல்ல போலீஸாா் அனுமதித்தனா். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ரத வீதியில் கண்காணிப்பு கேமராக்களும் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மாநகர பகுதி முழுவதும் 500 போலீஸாரும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் சுமாா் 1,000 போலீஸாரும் சுதந்திர தின பாதுகாப்புப் பணியில் திங்கள்கிழமை (ஆக. 12) முதல் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்ட மற்றும் மாநகர பகுதி எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸாா் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com