கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கிராம உதவியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் டி பிரிவு அடிப்படையில் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்துக்குப்பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் காலமான கிராம உதவியாளா்களுக்கு பிடித்தம் செய்த பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் கண்ணையா முன்னிலை வகித்தாா். வட்டத் தலைவா் வேல்பாண்டி வரவேற்றாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.முத்தையா, மாவட்டச் தலைவா் பாலகிருஷ்ணன், சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்ட அமைப்புச் செயலா் சுவாமிதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...