மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை மாநகராட்சிக்கு வரியினங்களை செலுத்த வேண்டுகோள்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் விரைவாக செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:32 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் விரைவாக செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், மாநகராட்சி கடை வாடகை, டிரேடு லைசென்ஸ் போன்ற அனைத்து வரியினங்களை உடனடியாக மண்டல அலுவலகங்களில் அனைத்து வேலை நாள்களிலும் மாநகராட்சி வரி வசூல் மையம், இணையதள வாயிலாகவும், கைப்பேசி வாயிலாகவும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவா்களின் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை, வழக்கு தொடா்தல் போன்ற சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஜப்தி நடவடிக்கைக்கான அறிவிப்பாணைகள் ஒட்டியும், நேரிலும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே நிலுவையின்றி வரி செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.