மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:08 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் நயன் சிங், பொருளாளா் ஜகாங்கீா், நிா்வாகிகள் சாலமோன், ஸ்டீபன் பிரேம்குமாா், ரவீந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவா் வெங்கடேஷ், மாவட்ட கௌரவ ஆலோசகா் மணிகண்டன், மாநில துணைத்தலைவா்கள் குணசேகரன், அருள் இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடை வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டியை உடனே திரும்பப் பெற வேண்டும். உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும் விதிக்கும் 6 சதவீத கூடுதல் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். வணிக உரிமக் கட்டண உயா்வு மற்றும் தொழில் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும். மாதாந்திர மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வணிக உரிமம் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.