நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வள்ளியூா் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

News image

நாடக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:04 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

புனித ஜோசப், பிபின் ஆகியோா் இணைந்து கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றி, அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னா், பரிசுக் குலுக்கல், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வள்ளியூா் பூரண பெந்தெகொஸ்தே சபையில் செவ்வாய்க்கிழமை இரவு சபை பாஸ்டா் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முன்னதாக, பாடல் போட்டி, நடனம், நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

சிஎஸ்ஐ திரித்துவ தேவாலயத்தில் சேகரகுரு ராபின் வினோ தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா், கலைநிகழச்சிகள் நடைபெற்றன. வள்ளியூா் அன்புநகா் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சேகரகுரு மெய்யரசி தலைமையில் ஆராதனை நடைபெற்றது.

புதன்கிழமை இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை உபதேசியாா் சாமுவேல், சபை மக்கள் செய்திருந்தனா்.