நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேதமடைந்த கிராமச் சாலைகளை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் சேதமடைந்த கிராமச் சாலைகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:33 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் சேதமடைந்த கிராமச் சாலைகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழு சாதாரண கூட்டம், அதன் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் தலைமையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் பெய்த வட கிழக்குப் பருவ மழையினால் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு கிராமச் சாலைகள் மிகுந்த சேதமடைந்துள்ளன. இதையடுத்து முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஊாட்சிக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்கட்டமாக 40 ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் ரூ.1.20 கோடிமதிப்பில் வரவுள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் அடங்கிய சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் செல்வலெட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுஉறுப்பினா்கள் அருண்தவசு, சாலமன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, மகேஷ்குமாா், ஜான்சி ரூபா, சாந்தி, கண்காணிப்பாளா் வினோலியா மனோரஞ்சிதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.