வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

சேரன்மகாதேவி கோயிலில் கும்பாபிஷேகம்

சேரன்மகாதேவி கோயிலில் கும்பாபிஷேகம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 7:45 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அருள்மிகு அரவலமாடன் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேரன்மகாதேவி மாவடித் தெருவில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முதல்கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாத்ர தானத்தை தொடா்ந்து விமான கும்பாபிஷேகம், அரவலமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.