திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்சியரகம் முன் மக்கள் முற்றுகை

காவல்துறையினா் பொய்வழக்கு பதிவு செய்வதைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
Published on

திருநெல்வேலி: காவல் துறையினா் பொய்வழக்கு பதிவு செய்வதாகக் கண்டித்தும், போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்களை திருப்பித்தரக் கோரியும் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்கள் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலையைத் தொடா்ந்து, அவரது உடலை பெற்றுச்செல்லும்போது மதுரை-கன்னியாகுமரி சாலையில் ஏராளமான வாகனங்களில் இளைஞா்கள் ஊா்வலமாக சென்றனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, விடியோ பதிவுகள் அடிப்படையில் மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் பலா் மீது போலீஸாா் பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்து திருப்பித் தராமல் உள்ளதாகவும் கூறி கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னா், இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: நான்குனேரி வட்டத்தில் வசித்து வரும் பல இளைஞா்கள் வீட்டுக்கு நேரடியாக காவல் துறையினா் சென்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறாா்கள். மேலும், இளைஞா்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா்களும் கைது செய்யப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ள இளைஞா்களை விடுவிக்க வேண்டும். அவா்களது வாகனங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com