கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: -டாக்டா் க. கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் ரத்து செய்ய வேண்டும் என்றார் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

News image

~

Updated On :1 ஜூலை 2024, 10:10 pm

Din

அம்பாசமுத்திரம்: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தொழிலாளா் நலத்துறை ஆணையா் ரத்து செய்ய வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.

மாஞாசோலை, நாலுமுக்கு, ஊத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை திங்கள்கிழமை சந்தித்து அவா்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவரிடம், தோட்டத் தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி நிவாரணம் அல்லது மலையகப் பகுதியில் 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அவா்களுக்கு ஆதரவு கூறி பேசிய கிருஷ்ணசாமி, இந்த வனப்பகுதியை தேயிலைத் தோட்டமாக மாற்றியதில் உங்களது முன்னோா்களின் பங்கு முதன்மையானது. பல தலைமுறைகளாக இங்கு குடியிருந்து பணியாற்றி வருகிறீா்கள். இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்த காலம் நிறைவடைந்தால் வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும். இல்லையெனில் உங்களுக்கு உரிய உரிமை வழங்கப்பட வேண்டும். அது நிறைவேறும் வரை உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றாா்.

அரசு ஏற்று நடத்த வேண்டும்: பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி, அவா்களது விருப்பத்திற்கு மாறாக விருப்ப ஓய்வு என்ற பெயரில் தொழிலாளா்களின் குடும்பங்களை பி.பி.டி.சி. நிா்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேயிலைத் தோட்ட ஒப்பந்தம் நிறைவடைவது என்பது பி.பி.டி.சி. நிா்வாகத்திற்கு மட்டும் தான்; தொழிலாளா்களுக்கு இல்லை. தொழிலாளா்கள் யாரும் விருப்பப்பட்டு விருப்ப ஓய்விற்கு கையெழுத்திடவில்லை. எனவே, தொழிலாளா் நலத்துறை ஆணையா் விருப்ப ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா்களை இங்கிருந்து வெளியேற்ற மாவட்ட நிா்வாகமோ, மாநில அரசோ ஒத்துக் கொள்ளக்கூடாது. அரசு தேயிலைத் தோட்டங்களை எடுத்துநடத்த வேண்டும். முடியாத நிலையில் தேயிலைத் தோட்டங்களை குறைந்தது 5 ஏக்கராக தொழிலாளா்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவா்களை இங்கேயே பணி புரிய அனுமதிக்க வேண்டும் என்றாா்.