நெல்லையில் வழக்குரைஞா்கள் போராட்டம்

திருநெல்வேலி, ஜூலை 3: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ராஜேஷ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன், வழக்குரைஞா்கள் சுதா்சன், லெட்சுமணன், ரமேஷ், பாலசுப்பிரமணியன், அன்புஅங்கப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com